Thursday, 4 May 2017

பலைப்பிலக்கியம்



மரபு கவிதை

                                                             


சுப்பிரமணிய பாரதி

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால்தேசிய கவியாகபோற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா



பாரதியாரின் இலக்கிய பணி
மீசை கவிஞன்என்றும்முண்டாசு கவிஞன்என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடிபோன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவிஎன்றும், ‘பாவேந்தர்என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காகசாஹித்ய அகாடமி விருதுபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 29, 1891
பிறப்பிடம்: புதுவை
இறப்பு: ஏப்ரல் 21, 1964
பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்
அவரது படைப்புகள்
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.


தேசிக விநாயகம் பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 271876 - செப்டம்பர் 261954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள்இலக்கியம் பற்றிய பாடல்கள்வரலாற்று நோக்குடைய கவிதைகள்குழந்தைப் பாடல்கள்இயற்கைப் பாட்டுக்கள்வாழ்வியல் போராட்ட கவிதைகள்சமூகப் பாட்டுக்கள்,தேசியப் பாட்டுக்கள்வாழ்த்துப் பாக்கள்கையறு நிலைக் கவிதைகள்பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.


கண்ணதாசன்
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள்ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள்நவீனங்கள்கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம்திருமகள்திரை ஒலிதென்றல்தென்றல்திரைமுல்லைகண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.
சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதிதிரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 13-4-1930-ல் பிறந்தார். தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள். இவர்களில் 4-வதாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம்.
1956-ம் ஆண்டில் வெளிவந்த 'பாசவலை', 'ரங்கோன் ராதா', 'மர்மவீரன்போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் 1957, 1958-ம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர்சிவாஜிகணேசன் நடித்த படங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம் பெறத்தொடங்கின.
சுமார் ஆண்டு காலத்தில் 57 சினிமாப்படங்களுக்கு 186 பாடல்களை எழுதினார்பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

புதிய கவிதை

நா. காமராசன்
நா. காமராசன்தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனகவிதை,புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், "கவியரசுசோசலிசக்கவிஞர்புதுக்கவிதையின் முன்னோடிபுதுக்கவிதை ஆசான்" என்றும் அழைக்கபடுகிறார்.
"தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது" என்று கவிஞர் வைரமுத்துவால் புகழப்பட்டவர்.

ந. பிச்சமூர்த்தி
ந. பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி,இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.[1] நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன].

மு. மேத்தா
மு.மேத்தா  
முகமது.மேத்தாபிறப்பு: செப்டம்பர் 51945பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தாவளமான கற்பனை,எளிய நடைஎளிய சொல்லாட்சிமனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும்தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள்,புதுக்கவிதைகள்சிறுகதைநாவல்கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.
"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை"
போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.

மீரா (கவிஞர்)
மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
படைப்புகள்
திறனாய்வு
1.   மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
கவிதை
1.   மீ.இராசேந்திரன் கவிதைகள்
2.   மூன்றும் ஆறும்
3.   மன்னர் நினைவில்
4.   கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்
5.   ஊசிகள்
6.   கோடையும் வசந்தமும்
7.   குக்கூ
கட்டுரைகள்
1.   வா இந்தப் பக்கம்
2.   எதிர்காலத் தமிழ்க்கவிதை
3.   மீரா கட்டுரைகள்
முன்னுரைகள்
1.   முகவரிகள்
கலந்துரையாடல்
1.   கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்
தொகுத்தவை
1.   தேன்சுவை (மீராஅப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்)
2.   பாரதியம் (கவிதைகள்)
3.   பாரதியம் (கட்டுரைகள்)
4.   சுயம்வரம் (கதைகட்டுரைகவிதை ஆகியவற்றின் கதம்பம்)
நடத்திய இதழ்கள்
1.   அன்னம் விடு தூது
2.   கவி

அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான்,(பிறப்பு: நவம்பர் 91937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும்,தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி'இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள்உருவகங்கள்படிமங்கள்குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூகஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
வைரமுத்து
வைரமுத்து இங்கு வழிமாற்றப்படுகிறது. இலங்கை நாடகக் கலைஞர் பற்றி அறிய வி. வி. வைரமுத்து கட்டுரையைப் பார்க்க.


வைரமுத்து (ஜூலை 131953)புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும்பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment